Dengue Fever: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  சிறுமி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


டெங்கு காய்ச்சல்:


மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பருவகால மழை முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கும் தண்ணீரிலிருந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிறது. சென்னை உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த பிரச்சனை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் ரக்‌ஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. 


தமிழ்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.


சிறுமி உயிரிழப்பு:


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45) மற்றும் சுமித்ரா(35) ஆகிய தம்பதியினருக்கு பிரித்திகா (15) தாரணி (13) யோகலட்சுமி (7) அபிநிதி(5) புருஷோத்தமன் எட்டு மாத கைக்குழந்தை என ஐந்து பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் யோகலட்சுமி அபிநிதி புருஷோத்தமன் ஆகிய குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்ததினர். இந்த நிலையில்  யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய இரண்டு குழந்தைகளும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டார் இந்த நிலையில் நேற்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் புருஷோத்தமன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் படிக்க 


Governor Ravi: ”சனாதனம் தான் எல்லாமே, யாராலும் அழிக்க முடியாது, முடிந்தால் தொட்டு பாருங்கள்” - ஆளுநர் ரவி சவால்