திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ளது நல்லூர்காடு மலை கிராமம், இந்த கிராமத்தில் காபி, மா , வாழை என அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. இந்த கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார்  பழனிசாமி (51). இவர், பெரியூர் ஊராட்சியில் குடிநீர்வடிகால் வாரியத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு  நல்லூர் காடு அருகே அப்பகுதியில் காபி தோட்டம் உள்ளது. விவசாய பணிக்காக தோட்டத்துக்கு, நேற்று பிற்பகல் 3 மணிக்கு பழனிசாமி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தோட்ட வேலைக்காக சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி கோமதி, பழனிசாமியை தேடிபார்க்க தோட்டத்துக்கு சென்றுள்ளார்.


தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு - வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கும் மீனவளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்



பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்


அப்போது காபி தோட்டத்தில் பழனிசாமி இறந்தநிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோமதி சத்தம்போட்டு அலற தொடங்கியுள்ளார். அலரல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர். அருகில் உள்ள கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்க  இதனையடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டு கூடினர். அப்போது காட்டுயானை மீண்டும் தோட்டத்துக்குள் வந்தது. இதை பார்த்தவுடன், கிராம மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 




இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனத்துறையினரும், தாண்டிக்குடி போலீசாரும் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், பழனிசாமியின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் காட்டு யானை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே முகாமிட்டிருந்தது. இதனால் பழனிசாமியின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.


பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்காது - மதுரை உயர்நீதிமன்றம்




இதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர். அதன்பிறகே பழனிசாமியின் உடல் மீட்கப்பட்டு உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  யானை மிதித்து விவசாயி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.


கொடைக்கானலில் மர்மான முறையில் உயிரிழந்த சிறுமி - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்


 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண