மதுரை  பேரையூர் அருகே உள்ளது சலுப்பபட்டி கிராமம்.  இப்பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் துவரிமானைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் கடந்த சில வருடங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு இளங்கோவன் மர்மான முறையில் இறந்து கிடந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த சாப்டூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிமொழி தலைமையிலான காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 





 


 



 

பின்னர் தோட்டத்து உரிமையாளர் பாண்டியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தோட்டத்தில் கட்டுக்கட்டாக 10 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளும் 2 ஜெராக்ஸ் மெஷின்களும் இருந்தது தெரிய வந்தது. 



 

மேலும் இந்த கள்ள நோட்டுகள் பதுக்கல் தொடர்பாக பாண்டியை கைது செய்த போலீசார் இந்த கள்ள நோட்டு அச்சடித்து வெளியிட்டது தொடர்பாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவும், இறந்து கிடந்த இளங்கோவன் இயற்கையாக இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் இறந்தவரின் உடலை சக காவலர்களுடன் இணைந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கனிமொழிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.