பேக் தொழிலாளியிடம்பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு. கைது செய்யபட்டுள்ள காவல் ஆய்வாளரின் சொத்து மற்றும் அவரது உறவினர்களை சொத்து விவரங்கள் எவ்வளவு என்பது குறித்து விபரங்கள் பதிவு துறையிடம் பெறபட்டுள்ளதா - நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷர்த். இவர் பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். வேலை தொடர்பாக மதுரை வந்திருந்த நிலையில், அப்போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் அர்ஷர்த் வைத்திருந்த 10 லட்சம் பணத்தை அச்சுறுத்தி, பிடுங்கிக்கொண்டனர்.
இது தொடர்பாக ஜூலை 27 ஆம் தேதி கொடுத்த புகாரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் சுதந்திராதேவி ஆகியோர் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டியை சேர்த்த பால்பாண்டி, மதுரை சிலைமானைச் சேர்ந்த உக்கிரபாண்டி, விருதுநகர் திருத்தங்களை சேர்ந்த கார்த்திக் என்ற சீமைச்சாமி, ஆகிய மூவரையும் கைது செய்து அவரிடம் இருந்த 2,26,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மூளையாக இருந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாகினர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளிலும் தேடிவந்தனர். அவரது செல்போன் நம்பரை சோதனை செய்து பார்த்தனர். அப்போது வசந்தி அவரது சகோதரர் குண்டு பாண்டியராஜ் ஆகிய இருவரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி ரவிக்குமார் தலைமையில் தனிப்படையினர் கோத்தகிரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு விடுதியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து மதுரை அழைத்துவந்தனர். பின்னர் இருவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆய்வாளர் வசந்தி தலைமறைவாக இருந்த சமயத்தில் தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்துள்ளார். அதில், "கள்ள நோட்டு மாற்றி கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து சோதனை செய்ய அவரிடமிருந்த 2 பைகளை பரிசோதித்துப் பார்த்தேன். அதில் பணம் எதுவும் இல்லை. ஆனால் தவறான குற்றச்சாட்டின் பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காவல் ஆய்வாளர் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார் இதுவரையும் அவரிடமிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றது எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி . இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் காவல்துறை ஆய்வாளராக உள்ளார் இது அவரை மட்டும் அல்லாமல் அவர் சார்ந்த துறையையும் களங்கப் படுத்தும் விதமாகவே உள்ளது.
எனவே இந்த வழக்கில் உண்மைகள் முறையான விசாரணை மேற்கொண்டு உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என நீதிமன்றம் விரும்புகிறது. என்று கூறிய நீதிபதி மனுதாரர் நீதிமன்ற தலையீட்டிற்கு பின்பே கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட பின்பு அவருக்கு சொந்தமான வீடுகளில் ஆய்வு நடத்தப்படவில்லை அவருக்கு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொத்துக்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை என்று கூறிய நீதிபதி மனுதாரர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் என்ன ஆவணங்கள் இருக்கு என்பது குறித்தும் மேலும் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!