தேனி மாவட்டம், தேனி  சுக்குவார்டன்பட்டியில் தாய் தமிழ்நாடு அக்ரோ பர்பஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்களாக இருப்பவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சரண்யாதேவி, சரவண பாலகுமார், தனபால் ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்தில் தேனி ரத்தினம்நகரைச் சேர்ந்த மணிகண்டன் மேலாளராகவும், அவரது மனைவி கார்த்திகா கணக் காளராகவும், பெரியகுளத்தைச் சேர்ந்த விஜயன், ராமகிருஷ்ணன் ஆகியோரும்  பணிபுரிந்து வந்தனர்.


தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்




இந்நிலையில் வடபுதுப்பட்டியை சேர்ந்த பிரேமா என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார் அதில்  தாய் தமிழ்நாடு அக்ரோ பர்பஸ் என்ற நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும்  மணிகண்டன், அவரது தான் பணிபுரியும் நிறுவனத்தில் வைப்பு நிதியாக  ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டிற்கு பிறகு முதிர்வு தொகை ரூ.1.24 லட்சம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.  இதை நம்பிய பிரேமா  2023 செப்டம்பர் முதல் 2024 ஜனவரி வரை 11 தவணை களாக ரூ.47 லட்சம் முதலீடு செய்துள்ளார். மேலும் தங்களது நிதிநிறுவனத்தில் இயக்குநராக சேர்த்துக்கொள்வதாக கூறி பிரேமாவிடம் மணிகண்டன் மேலும் 25 லட்சம் ரூபாய்  என மொத்தம் ரூ.73.50 லட்சம் ரூபாயை அந்நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்துள்ளார்.


TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?




இதற்கிடையே தனது வைப்பு நிதியின் முதிர்வு காலம் முடிந்ததால் முதலீடு பணத்தை பிரேமா திரும்ப கேட்டதற்கு பணத்தை திரும்ப வழங்காமல் மணிகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரேமா  இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் நிறுவனம் பெயரில் மேலும் 7  நபர்களிடம் வேலை தருவதாக கூறி அதற்கு டெபாசிட்டாக ரூபாய் 26 லட்சம் ஏமாற்றியது,  முதலீட்டாளர்களிடம் என மொத்தம் 99.50 லட்சம் மோசடி செய்தது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


அதனைத் தொடர்ந்து நிதி நிறுவனம் பெயர் மற்றும்  இயக்குனர்கள் சரண்யாதேவி, சரவண பாலகுமார், தனபால், கணக்காளர் கார்த்திகா, அங்கு பணிபுரிந்த விஜயன், ராமகிருஷ்ணன் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் மேலாளர் மணிகண்டனை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.