பொது நல வழக்கை தவறாக பயன்படுத்த கூடாது. என்ன, என்ன வகை பொது நல வழக்குகளில், எந்த அளவில் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என வரைமுறை படுத்த வேண்டும் - நீதிபதிகள்
நீதிமன்றத்தில் மனு
திருநெல்வேலி நாங்குநேரியைச் சேர்ந்த நவீன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மலையடி புதூர், செங்கலக்குறிச்சி கிராம பஞ்சாயத்துகள் பகுதியில் உள்ள தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிய மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள்
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், தமிழகத்தில் சுமார் 13ஆயிரம் கிராம ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மாநாகராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு அமைப்புகளிலும் அடிப்படை வசதி கோரும் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அவை அனைத்தும் பொது நல மனுக்களாக தாக்கல் செய்யும் போது எதிர் மனுதாரரின் பதிலை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. வழக்கறிஞர்கள் பொது நல மனு தாக்கல் செய்தவுடனேயே நிவாரணம் உத்தரவை நீதிமன்றத்திடம் எதிர் பார்க்கக் கூடாது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என. உத்தரவிடுவது நீதிமன்றத்தின் பணி அல்ல. அரசு நிர்வாகம் தான் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். கிராமங்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக அரசிற்கு போதிய நிதி வசதி செய்து தர வேண்டும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு பணியாளர்கள், ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்கும் பலவாரும் தொகை தேவைபடுகிறது. பொது நல வழக்கை தவறாக பயண்படுத்த கூடாது. என்ன என்ன வகை பொது நல வழக்குகளில் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என வரைமுறை படுத்தபடுத்த வேண்டும்.
உத்தரவு பிறப்பிக்க இயலாது
தற்போதைய நிலையில் உயர்நீதிமன்ற கிளையில் நூற்று கணக்கான மேல் முறையீட்டு மனுக்கள், நீதிமன்றத்தால் தீர்க்க வேண்டிய வழக்குகள் அதிகமாக உள்ளது. எனவே கிராமங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணி அரசு அதிகாரிகளுடையது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொது நல வழக்கில் தொடர்ந்து உத்தரவு பிறப்பிக்க இயலாது. சிறு சிறு அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். உயர்நீதிமன்றத்திற்கு விசாரிக்க வேண்டிய நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகமாக உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் உரிய அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் பெற உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் - Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Suruli falls: பருவ மழை அதிகரிப்பால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை