தமிழகம் முழுவதும் நேற்று இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உள்ளிட்ட பணிக்காக நடைபெறும் எழுத்து தேர்வுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வுக்காக ஆண்கள் 9 ஆயிரத்து 741 பேர், பெண்கள் 2 ஆயிரத்து 72 பேர் மற்றும் திருநங்கை ஒருவர் என மொத்தம் 11 ஆயிரத்து 814 விண்ணப்பித்திருந்தனர்.
இதையொட்டி நேற்று காலை தேர்வு எழுதுவதற்காக, காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்கள் முன்பு தேர்வர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டுடன் வந்தவர்கள், போலிசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் எலக்ட்ரானிக்ஸ் கைக்கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோன்று முகக்கவசம் அணிந்து வந்தவர்கள், முகக்கவசத்தை அகற்றிய பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். எழுத்து தேர்வுக்காக 11 ஆயிரத்து 814 பேர் விண்ணப்பித்த நிலையில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 887 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 1,927 பேர் தேர்வு எழுத வரவில்லை.
Flights Delay : அதிகாலை முதல் சென்னையில் அதீத பனிமூட்டம்.. விமானங்கள் தரையிறங்க தாமதம்..
அதேபோல் தேனி மாவட்டத்தில் 13 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. தேர்வை எழுத 9,432 ஆண்கள், 1,300 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 10 ஆயிரத்து 733 பேர் அனுமதி பெற்றிருந்தனர். தேர்வு மையங்களுக்கு காலை 7 மணியில் இருந்து தேர்வர்கள் வரத்தொடங்கினர். போலீசார் பரிசோதனை செய்த பின்பு அவர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
Twitter : வாவ்.. இனிமே ட்விட்டர்ல இத்தனை வார்த்தைகளை எழுதலாமா? எலான் மஸ்கின் பதில் இணையத்தில் வைரல்!
தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 7,916 ஆண்கள், 1,047 பெண்கள், மாற்றுப்பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8,963 பேர் தேர்வு எழுதினர். 254 பெண்கள் உள்பட 1,770 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு கண்காணிப்பு பணியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். தேர்வு மையங்களை தேனி மாவட்டத்துக்கான தேர்வு சிறப்பு பார்வையாளரான திருப்பூர் டி.ஐ.ஜி. அபினவ் குமார், மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்