Twitter : வாவ்.. இனிமே ட்விட்டர்ல இத்தனை வார்த்தைகளை எழுதலாமா? எலான் மஸ்கின் பதில் இணையத்தில் வைரல்!

ட்வீட்களின் எழுத்து வரம்பை 280-இல் இருந்து 420-ஆக உயர்த்த பரிந்துரை செய்த ட்விட்டர் பயனருக்கு "நல்ல யோசனை" என்று எலான் மஸ்க் பதிலளித்தார்.

Continues below advertisement

ட்வீட்களின் எழுத்து வரம்பை 280-இல் இருந்து 420-ஆக உயர்த்த பரிந்துரை செய்த ட்விட்டர் பயனருக்கு "நல்ல யோசனை" என்று எலோன் மஸ்க் பதிலளித்தார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

முதலில் 140 எழுத்துகள் வரை எழுத்துகளை அனுமதித்த ட்விட்டர், ட்வீட்களுக்கான எழுத்து வரம்பை செப்டம்பர் 2017 ல் 280 எழுத்துகள் வரை அனுமதித்து இரட்டிப்பாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

ட்விட்டரின் புதிய உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எலன் மஸ்க் இன்று சமூக வலைத்தளங்களை ஒன்றாக இணைக்கும் ” எவ்ரிதிங் ஆப்” குறித்து தனது பார்வையை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதன்படி, அதில் ட்விட்டரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தபிறகு, ட்விட்டரில் சில மாற்றங்களை கொண்டுவர சில ஸ்லைடுகளை பகிர்ந்தார். 

அந்த முதல் ஸ்லைடு தொடக்கத்தில் ‘நாங்கள் ஆட்சேர்ப்பு செய்கிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இரண்டாவது ஸ்லைடில், நவம்பர் மாதம் முதல் ட்விட்டர் தளத்தில் வெறுப்பு பேச்சுகள் மற்றும் பேக் ஐடிக்கள் குறைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, நவம்பர் 16 வரையிலான ஏழு நாட்கள் கணக்கில் ஒரு நாள் அடிப்படையில் சராசரியாக 2 மில்லியனுக்கும் அதிகமான புதிய பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகிறார்கள். இது எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்றார். 

“பொழுதுபோக்கு, வீடியோ, என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிஎம்கள், லாங்ஃபார்ம் ட்வீட்கள், ப்ளூ வெரிஃபைடு, பேமெண்ட்டுகள் போன்றவை மீண்டும் ட்விட்டர் 2.0 - தி எவ்ரிதிங் ஆப்' என்ற தலைப்புடன் தொடங்கப்படும் என அடுத்தடுத்த ஸ்லைடுகளில் தெரிக்கப்பட்டு இருந்தது. 

இதற்கிடையில், ட்விட்டர் பயனர் ஒருவர் ட்விட்டர் 2.0 எழுத்து வரம்பை 280க்கு பதிலாக 420 ஆக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கு மஸ்க், "நல்ல யோசனை" என்று பதிலளித்தார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

Continues below advertisement