Online Gambling Prohibition Act:  தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசரச் சட்டம் காலாவதியாகியுள்ளது.


ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்து இருந்தது, ஆனாலும் ஆளுநர் கையெழுத்து போடாததால், இந்த அவசரச் சட்டம்  காலாவதியாகியுள்ளது. நேற்றுடன் அவசரச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆன்லைன் சூதாட்ட அவசரத் தடைச் சட்டம் இன்றுடன் காலாவதியாகியுள்ளது. அவசரச் சட்டத்திற்கு ஆறு மாதங்களுக்குள்ளும், சட்ட மசோதாவிற்கு ஆறு வாரத்திற்குள்ளும்,  கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் சட்ட மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அவசர சட்டம் இன்றுடன் காலாவதியாக்கியுள்ளது. 


ஏற்கனவே,  நிரந்தர ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் விளக்கம் கேட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்திருந்தது.  கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை எதிர்த்தும், அதனை தடை செய்யவும் சட்டம் இயற்றியது. இதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அக்டோபர் 1 ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட பின் கூடும் சட்டசபை நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகிவிடும். அதன்படி நேற்றுடன் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் காலாவதியானது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் நிரந்தர சட்டத்திற்கு அதாவது சட்ட மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. 


ஆன்லைன் சூதாட்டத்தை  ஏன் தடை செய்ய வேண்டும், இந்த சட்டத்தை ஏன் அமல் படுத்த வேண்டும் என விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர்.  அதற்கு தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளது. 






ஆளுநருக்கு கடிதம் வாயிலாக பதில் அளித்த பிறகு இது குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுயது, ’’உலகம் முழுவதும் உள்ள டேட்டாக்களை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்தும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டும் தான் இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும். முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வருவதில் மிகவும் உறுதியாக உள்ளார். ஆளுநர் கோரிய விளக்கங்களை அளித்துவிட்டோம் எனவும், அவரை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கித் தரவில்லை’’ என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார்.