நடிகர் புரோட்டா சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது மணமகள் அறையில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது, இது குறித்து மேலாளர் சூர்ய பிரகாஷ் கொடுத்த புகாரின் பெயரில் கீரைத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது குறித்து சூரியின் உறவினர்கள் சிலர் கூறும்போது "கடந்த 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கொரோனா காலகட்டம் என்பதால் திருமணத்திற்கு அதிக அளவில் யாருக்கும் சொல்லவில்லை. சினிமா பிரபலங்கள் கூட குறைந்த அளவுதான் வந்திருந்தனர். திருமணத்தன்று மணமகள் அறையில் இருந்த 10 சவரன் நகை திருடு போனது. முதலில் வழக்கு கொடுக்க வேண்டாம் என நினைத்தார்கள், தற்போது நண்பர்கள் ஆலோசனைப் படி கீரத்துறை காவல்நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளனர்’ என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
காரைக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட பெண்கள் கைது
காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை புகார்கள் அதிகளவில் நடந்து வந்த நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் உத்தரவில் தனிப்படை அமைக்கப்பட்டது. காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே பைக் ஸ்டாண்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை தனிப்படை போலீஸார் விசாரிக்கச் சென்றபோது ஓட முயன்றனர்.
போலீஸார் விரட்டிப் பிடித்து விசாரித்ததில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (27), மீனாட்சி (35) என்பதும் தற்போது திருச்சியில் வசிப்பதும் தெரியவந்தது. காரைக்குடி பகுதியில் பேருந்து, கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து 17 பவுன் நகைகளை காரைக்குடி குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி பகுதியில் பேருந்து, கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து 17 சவரன் நகைகளை காரைக்குடி குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க -”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !