மதுரை கோரிப்பாளையத்தில் வர்ம வைத்தியசாலை நடத்தி வரும் சையது சுல்தான் மொகைதீன், போலியாக சித்த மருத்துவம் பார்ப்பதாக, உசிலம்பட்டியில் உள்ள இணை இயக்குநர் லதாவுக்கு, புகார்கள் சென்றன. இதன்பெயரில் வர்ம வைத்திய சாலையில் இணை இயக்குனர் தலைமையில், மதுரை மாவட்ட தேசிய நலக்குழும சிறப்பு ஆலோசகர் டாக்டர் சாமி மற்றும் அரசு சித்த மருந்தக சித்தா மருத்துவ அலுவலர் டாக்டர் நளினி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சையது சுல்தான் மொகைதீன், சித்த மருத்துவம் பார்ப்பதற்கு தகுதி உடையவர் தானா என உறுதி செய்ய, பெரியகுளத்தில் உள்ள மாவட்ட சித்தமருத்துவ அலுவலரிடம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, சையது சுல்தான் மொகைதீன் மாவட்ட சித்த மருத்துவர் அலுவலரிடம் அளித்த விளக்கங்கள் மூலம், அவர் சித்த மருத்துவம் பார்க்கத் தகுதி வாய்ந்தவர் இல்லை என்ற விபரம் அறியப்பட்டது. இது குறித்து இணை இயக்குனர் லதா அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீசார் சையது சுல்தான் மொகைதீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
அதே போல் மதுரையில் வேறு ஒரு குற்றத்திற்கு மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி செய்ததாக கணவன் மனைவி உட்பட ஆறுபேர் மீது வழக்கு பதிவு செய்து கணவரை போலீசார் கைது செய்தனர். மதுரை முடக்குச்சாலை கணேசபுரத்தை சேர்ந்தவய் விருமாண்டி 51. முனிச்சாலை இஸ்மாயில் புரத்தை சேர்ந்தவர்  ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவர் விருமாண்டிக்கு உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
 
2019 ஆம் ஆண்டு முதல்  பல்வேறுகட்டங்களாக பாலாஜி அவருடைய மனைவி மஞ்சுளா, பாத்திமா நகரை சேர்ந்த சுரேஷ், ஆணையூர் ஓம்சக்தி நகரைச்சேர்ந்தசேர்ந்த ஞானசேகரன், முனிச்சாலை இஸ்மாயில் புரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் ராஜேந்திரன், கரும்பாலை நடுத்தெருவை சேர்ந்த பேபி கே.பி. முத்து ஆகியோர் பல்வேறு கட்டங்களாக 2019 ஆம் ஆண்டுமுதல் ரூ 55 லட்சத்து 39 ஆயிரம் வாங்கியுள்ளனர். அவர்கள் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை .ஏமாற்றியது தெரிய வந்தது .இதுகுறித்து விருமாண்டி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவி உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.