Keezhadi Excavation: கொந்தகை அகழாய்வு தளத்தில்  இறுதி சடங்கில் பயன்படுத்திய 20 பொருட்கள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வுப் தளத்தில் இறுதி சடங்கில் பயன்படுத்திய 20 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட  அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த  ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு  பிப்ரவரி முதல் செப்டம்பர் 30 வரை அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் நிறைவு பெறலாம் என சொல்லப்படுகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, விளையாட்டு சில்லுகள் என ஏகப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றன. 8-ம் கட்ட அகழாய்வில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் முதுமக்கள் தாழிகளை தொடர்ந்து அகழாய்வு செய்யும்பட்சத்தில் முதுமக்கள் தாழி உள்ளே நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

Continues below advertisement


சமீபத்தில் தாழி எண்  80வது   முதுமக்கள் தாழியியே திறந்து போது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  காரணம்  இந்த முதுமக்கள் தாழி உள்ளே 74 சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட சூதுபவள மணிகள் பார்ப்பதற்கு சிவப்பு  நேரத்தில் அழகாய்  உள்ளது. கொந்தகையில் இதற்கு முன்பு நடந்த இரண்டு கட்ட அகழாய்வில் இது மாதிரி  முதுமக்கள் தாழியினுள்  சூது பவளம் மணிகள் கிடைக்கவில்லை. இதுவே  முதன்முறையாகும்  இது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தற்போது கிடைத்துள்ள சூது பவள மணிகளை  வைத்து பார்க்கையில் இது மிகவும் வசதியான செல்வந்தருடைய முதுமக்கள் தாழியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 
கொந்தகையில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு  தற்போது வரை மொத்தம் 134தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன,  தற்போது முதுமக்கள்தாழிகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஒரே முதுமக்கள்தாழியில் 74 சூதுபவளங்கள், கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாழி எண்116 மற்றும் தாழி எண்123என  இரண்டு முதுமக்கள் தாழிகளை  திறந்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு முதுமக்கள் தாழியில் உள்ளே, எந்த ஒரு சேதமும் அடையாமல்  சிறிய பானைகள், கின்னங்கள், மூடிகள் நம் முன்னோர்கள் இறுதி சடங்கில் பயன்படுத்திய 20 பொருட்கள்  கண்டறியப்பட்டன.

 
மேலும் அதற்கு கீழே மனித மண்டை ஓடு, எலும்பு துண்டுகள்  இருந்தன. அதேபோல் மற்றொரு முதுமக்கள்தாழியில் ஒரு பானை, மண்டை ஓடு, எலும்பு துண்டுகள் கண்டறியப்பட்டன.  மேலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் டி.என்.ஏ பகுப்பாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து கொந்தகையில் தாழிகள் திறக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
 
 
Continues below advertisement