மதுரை வாடிப்பட்டி அடுத்த மன்னாடிமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி அன்னலட்சுமி. இவர் மன்னாடி மங்கலம் கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள அனுமதிபெற்றுள்ளார்.

இதனையடுத்து வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 40 மூடை சிமெண்ட் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அன்னலட்சுமியின் கணவர் உயிருடன் இருந்தபோது மன்னாடி மங்கலம் ஊராட்சி செயலாளரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அன்னலட்சுமியிடம் உன் கணவர் பணம் எதுவும் தரவில்லை" என்று கூறி அன்னலட்சுமியிடம் 20 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. 



 

இந்த பணத்தை ஊராட்சி செயலரும், வார்டு உறுப்பினரும் பங்கு போட்டு கொண்டதாகவும், பணி மேற்பார்வையாளர், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும் பணம் கொடுக்க வேண்டும் அப்போதுதான் கையெழுத்து போடுவார்கள் என்று கூறுவதாகவும் குற்றம்சாட்டி தனது வீட்டின் கட்டுமானம் முடிந்த பிறகும் எனக்கு உரிய பணம் மற்றும் கட்டுமான பொருட்கள் தரப்படவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அன்னலட்சுமி  புகார் மனு அளித்தார். மேலும் தன்னிடம் இருந்து வார்டு உறுப்பினர் 20ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெறும் வீடியோ ஆதாரத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இது குறித்து ஊராட்சி செயலாளர் செந்தில் மற்றும் 11 ஆவது வார்டு உறுப்பினர் அருள் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டியும், வீட்டு பணிகளை தொடங்க நிதியை பெறுவதற்கான மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அன்னலட்சுமி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.