கொரோனாவுக்கு பின் மதுரை மண்டல அளவில் 50 சதவீதம் கூடுதலாக பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் பேட்டி

 

 அவர் அளித்த பேட்டியில், "மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மண்டல பாஸ்போர்ட் அலுவலராக வசந்தன் கடந்த 9-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "மதுரை மண்டல அளவில் 2021 ஆம் ஆண்டில் கொரோனா காலகட்டத்தில் 1,51,905 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது, 2022 ஆம் ஆண்டில் 2,27,812 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.



2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் 50 சதவீத பாஸ்போர்ட்கள் கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது, மதுரை மண்டலத்துக்கு உட்பட பாஸ்போர்ட் அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,295 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆன் லைனில் விண்ணப்பம் செய்த அடுத்த நாள் விண்ணப்பதாரர் அழைக்கப்படுகிறார்கள்.  காவல்துறை விசாரணை முடிந்த 3 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றது, இதுவரை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் 6,000 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஆவணங்கள்.



காவல்துறை விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக மதுரை, கன்னியாகுமரி, தேவக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் வருகிறது. இந்திய அளவில் பாஸ்போர்ட் வழங்குவதில் குறைந்த  பெண்டிங்க் லிஸ்ட்  வைத்திருக்கும் அலுவலகத்தில் மதுரையும் ஒன்று." என கூறினார்