திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவள்ளூர் ஊராட்சியில் 4500 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக அண்ணாமலை என்பவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கிராமத்தில் உள்ள 9 வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவராக கீதா சுரேஷ் உள்ளிட்டோர் பதவி வகித்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் நாராயணன் என்பவர் ஊராட்சிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை செய்ய விடாமல், கிராமத்திற்கு திட்டங்களை செயல்படுத்த விடாமல் ஊராட்சி மன்ற தலைவரையும், ஊராட்சி மன்ற துணைத் தலைவரையும், ஊராட்சி உறுப்பினர்கள் யாரையும் மதிக்காமலும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வராமல் அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்.


 




 


மேலும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஊராட்சி செயலாளர் தகாத வார்த்தைகளால் பேசி சர்வாதிகாரப் போக்கில் அராஜக செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நாராயணன் என்பவர் அதே ஊராட்சியில் 18 வருடங்களாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருவதால் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுகவைச் சேர்ந்த பெ.சு.தி.சரவணன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் அவரின் உதவியோடு கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து வேறு ஊராட்சிக்கு மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆகியோருக்கு இதுவரையில் 40 முறை புகார் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை இன்று 5 லிட்டர் பெட்ரோல் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.


 





 


அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் துறையினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி சென்றதால் காவல் துறையினரிடம் நான் அளித்த மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நான் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் ஏன் என்னை தடுக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறுவள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஊராட்சி செயலாளர் நாராயணன் ஊராட்சியை விட்டு பணி மாறுதல் செல்ல மறுப்பதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவதாக ஊராட்சி மன்ற தலைவர் வேதனையுடன் தெரிவித்தார்.


நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.