கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற சுற்றுலா வாகனம் ஒன்று மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒத்தக்கடை அருகே வந்தபோது நின்று கொண்டிருந்த தண்ணி லாரியின் பின்பக்கம் மோதியதில் சம்பவ இடத்திலே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர் மற்றும் ஓட்டுநர் பிரபு இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த பத்திற்கும் மேற்பட்டவரை மீட்ட பொதுமக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல்துறை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தண்ணீர் லாரி ஓட்டுனரையும் தேடி வருகிறார்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘மொழி’ போன்ற படங்களை எடுக்க எனக்கும் ஆசை தான் ஆனால் ஹீரோக்கள்..... - இயக்குநர் முத்தையா சொல்லும் காரணம்
இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது,மேலும் சுற்றுலா வந்த இடத்தில் வாகனம் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுரைக்கு உட்பட்ட பகுதிகளான ஒத்தக்கடை முதல் கொட்டாம்பட்டி வரைஅதிகளவு சாலை போக்குவரத்து விதி மீறல் நடைபெறுகிறது. குறிப்பாக கிராம மக்கள் தங்களது கால்நடைகளை சாலையில் விடுவதும். ஒன்வே வழியாக வாகனங்களை ஓட்டி வருவதாலும் அதிகளவு விபத்து ஏற்படுகிறது. மேலும் லாரிகள், உள்ளிட்ட கனரக வாகங்களை சாலையிலேயே நிறுத்துவது இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சுற்றுலா வந்த இடத்தில் வாகனம் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்