Just In




‘மொழி’ போன்ற படங்களை எடுக்க எனக்கும் ஆசை தான் ஆனால் ஹீரோக்கள்..... - இயக்குநர் முத்தையா சொல்லும் காரணம்
மண்சார்ந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என என்னிடம் வரும் ஹீரோக்கள் விரும்புகின்றனர், எனது திரைப்படங்களில் எந்த பின்புலமும் இல்லை - இயக்குநர் முத்தையா பேட்டி.

தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ள பிரமாண்டமான இயக்குநர் ஷங்கர். அவரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். படத்திற்கு படம் வித்தியாசங்களை அள்ளி கொடுக்கும் நடிகர் கார்த்தியின் ஜோடியாக விருமன் திரைப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூர்யா & ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது. இந்நிலையில் வெளிவரவுள்ள விருமன் பட திரைப்பட ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரை ராஜ முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட விருமன் திரைப்பட இயக்குநர் முத்தையா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது..,” பண்பாடு மாறாமல் மண் சார்ந்த மரபுகள் மாறாத படம் குடும்ப உறவுகள் எடுத்துரைக்க கூடிய திரைப்படமாக விருமன் திரைப்படம் அமையும். இதுவரை ஆடியோ ரிலீஸ் வைக்காத நிலையில் இந்த படத்திற்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை மதுரையில் வைத்துள்ளேன். நான் பிறந்த மதுரை மண்ணில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி வைத்திருப்பது பெருமையாக உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்