தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


நீட் தேர்வில் முறைகேடு வழக்கு: மாணவரின் கைரேகை இல்லை; வழக்கு ஒத்திவைப்பு


மேலும் நிரம்பிய வைகை அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பும் வகையில் 58-ம் கால்வாயில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.




இந்தநிலையில் வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்  ஆகியோர் 58-ம் கால்வாய் மதகுகளை இயக்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.


Kanchipuram Cylinder Blast: காஞ்சிபுரம் அருகே நடந்த பயங்கரம்.. வெடித்த எரிவாயு சிலிண்டர்.. 12 பேரில் நிலை என்ன?


தற்போது அணையில் இருந்து 58-ம் கால்வாயில், வினாடிக்கு 150 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் கால்வாய் வழியாக சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணித்து, உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்களில் உள்ள 33 கண்மாய்களை சென்றடையும். இந்த தண்ணீர் மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் 1,912 ஏக்கர் நிலமும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 373 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.


DMK District Secretaries : திமுகவில் அதிரடியாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள்.. 7 பேர் மாற்றம்.. முழு விவரம் உள்ளே..!


Naane Varuven Release LIVE: செல்வராகவனின் “மாஸ்டர் பீஸ்” ... நானே வருவேன் படத்தை பாராட்டும் ரசிகர்கள்


வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே, 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும். இதனால் அணையின் நீர்மட்டத்தை 68 அடியில் நிலை நிறுத்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், உசிலம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.