சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கோச்சடை கிராமத்தில் அய்யனார் கண்மாய் கரையில்  காவல் தெய்வமாக  களதி உடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காளி கருப்பன் உள்ளிட்ட பல்வேறு சிறு தெய்வங்கள் உள்ளது. அதே போல் ஏனாதி செங்கோட்டை மக்களுக்கு குல தெய்வமாக முத்தையா கோவிலும் அமைந்துள்ளது.



 

இதை சற்று கவனிக்கவும் பிளீஸ் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

ஆண்டுதோறும் இங்கு சுமார் 400 கிடா வெட்டி பெரும் விழாவாக கொண்டாடுவது வழக்கம். கடந்த சில   வருடங்களாக கொரோனா ஊரடங்கு பிரச்னையால், விழா நடத்த முடியாமல் இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசு சில தளர்வுகள் அளித்துள்ளதால், இந்தாண்டு குறைந்த  பக்தர்கள்  பங்கேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. திருமணம் முடிந்து வெளி மாநிலத்தில் தங்கியவர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு ஆவணி மாத திருவிழாவை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.




 

விழாவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டது. இதில் மானாமதுரை சுற்றி உள்ள  கிராம மக்கள் கலந்துகொண்டனர். டெல்லி, மும்பை உள்ளிட்ட வடமாநிலத்தில் இருந்தும் சொந்த ஊருக்கு திரும்பிய பக்தர்கள் சாமியை வேண்டிச் சென்றனர். 2 வருடமாக திருவிழா நடைபெறாமல் இருந்தநிலையில் தற்போது பழைய படி திருவிழா கொண்டாடியது மகிழ்ச்சி என பக்தர்கள் தெரிவித்தனர். கொரோனா காலம் என்பதால் ஆடு வெட்டும் நிகழ்வு முடிந்த உடன்  சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்கள் கிடாயை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இந்த விழாவில் கிடாய் வெட்டும் போது ஆடு தலை அசைக்கவில்லை என்றால் கண்டிப்பாக கிடாய் வெட்ட மாட்டார்கள். இது கோவில் கட்டுப்பாடாக உள்ளது. வீட்டுக்கு எடுத்துச் சென்ற கிடாயை பங்கு பிரித்து உறவினர்களுக்கு சமைத்துக் கொடுத்து மகிழ்ந்தனர்.

 

இது குறித்து வெளியூரில் இருந்த இளைஞர்கள் கூறுகையில்...,” கஷ்டப்பட்டு வெளியூரில் வேலை செய்யும் எங்களுக்கு இது போன்ற திருவிழா தான் ஆறுதல். இந்தாண்டும் திருவிழா தடைபடாமல் நடைபெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.