காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட 110 விலை உயர்ந்த செல்போன்களை மாவட்ட எஸ்.பி.கார்த்திக் இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். காணாமல் போன 110 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில், திருடுபோன மற்றும் காணாமல் போன செல்போன்கள் அடையாளம் காணப்பட்டு அவரவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்ற செல்போன் திருட்டினை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் மாவட்ட காவல் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். பொது மக்களிடம் திருடுபோன மற்றும் காணாமல் போன 311 செல்போன்கள் காணாமல் போனதாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்கான மாவட்ட எஸ்பி கார்த்திக் தனிப்படை ஒன்றை அமைத்து இருந்தார்.
‛அம்மா மாதிரி ஸ்டாலின் செயல்படுகிறார்...’ செல்லூர் ராஜூ புகழாரம் !சீமான் குறித்து அவதூறு - மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் பேராசியர் ஜெயராமன் மீது போலீசில் புகார்
அந்த தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி 110 விலை உயர்ந்த செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 110 செல்போன்களும் இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உரியவர்களிடம் மாவட்ட எஸ்பி கார்த்திக் ஒப்படைத்தார். ஒப்படைக்கப்பட்ட செல்போன்கள் 7 லட்சம் மதிப்பு உடையது என போலீசார் தெரிவித்தனர்.
138 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் மணிக்கூண்டு - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிப்பு
பொது இடங்களில் மது அருந்தினால் சிறை - திருவாரூர் எஸ்.பி. எச்சரிக்கை
மேலும், இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி.கார்த்திக் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 110 விலை உயர்ந்த செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். அவை இன்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், செல்போன் விற்பனை நிலையங்களில் பழைய செல்போன்களை விற்க வருபவர்களிடம் விலைக்கு வாங்கும் போது அவர்களின் தன்மை அறிந்து அந்த செல்போன்கள் அவர்களுடையதானா என்பதை ஆராய்ந்து அவர்களது ஆதார் எண்ணை பெற்றுக்கொண்டு பழைய செல்போன்களை வாங்கவோ விற்கவோ செய்ய வேண்டுமென்று செல்போன் விற்பனை நிலையங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.