சமீபத்தி ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது மூன்று முன்னாள் அமைச்சர்களின் நலனுக்காக செய்யப்பட்டது என நிதியமைச்சர் பி.டி.ஆர் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ...,” நிதியமைச்சரின் பின்புலம் என்னவென்று தெரியும். பொறுப்பான அமைச்சர் வாயில் இருந்து இப்படியான வார்த்தைகள் வருவது வரவேற்கத்தக்கது இல்லை. தற்போது ஆட்சி அதிகாரம் நிதித்துறை அவரிடத்தில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் பயன்பாடு குறித்து மதுரை மக்களுக்கு தெரியும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 75% பணிகள் மதுரை மத்திய தொகுதியான தற்போதைய நிதியமைச்சரின் தொகுதியில் தான் நடைபெறுகிறது. அதுவே முதலில் அவருக்கு தெரியவில்லை. சட்டம் உங்கள் கையில் உள்ளது எவன் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள். பொத்தாம் பொதுவாக குறைகூற வேண்டாம்” என கடுமையாக சாடினார். இதனால் அன்றைய தினம் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் பேட்டியும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியும் பரபரபப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க எடுத்த நடவடிக்கைகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போலவே, முதலமைச்சர் ஸ்டாலினும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்ததுள்ளார்.
இன்று மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்தார். பின்னர் மாநகராட்சி வளாகத்தில் அவர் அளித்த பேட்டி...,” நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது, அதனை விரைவில் சீரமைக்க வேண்டும் மேலும் பாதாள சாக்கடை தண்ணீர் குடிநீரில் கலப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள், அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!