உசிலம்பட்டி அருகே முயல் வேட்டையாடிய 11 பேரை கைது செய்த உசிலம்பட்டி வன சரக அலுவலர்கள் - 11 பேருக்கும் தலா 50 ஆயிரம் வீதம் 5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள செட்டிகுளம் பகுதியில் முயல் வேட்டையாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி வனச் சரக அலுவலர் அன்பழகன் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

 





இந்த ஆய்வின் போது செட்டிகுளம் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்த அடைக்கம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், வெள்ளைச்சாமி, ராஜ்குமார், அஜித், சின்னசாக்கிளிபட்டியைச் சேர்ந்த ராமசாமி, சௌந்திரபாண்டி, பழனிமுருகன், ராஜபாண்டி, கார்த்திக், அழகர் மற்றும் வெள்ளைப்பாறைபட்டியைச் சேர்ந்த வடிவேல் என்ற 11 பேரை உசிலம்பட்டி வனச் சரக அலுவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து இறந்த நிலையில் மூன்று முயல்களையும் பறிமுதல் செய்தனர்.



 

முயல் வேட்டையாடியது தொடர்பாக 11 பேருக்கும் தலா 50 ஆயிரம் விதம் 5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து, வனவிலங்குகள் வேட்டையாடுவதோ, வீட்டில் வளர்ப்பதோ வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தவறு என வனத்துறை அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.,

 


 












ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண