தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.  இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு. மனு குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.


 


 


 

 


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தனக்கு ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரைைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உட்பட 9 பேர் மதுரை சிறையில் உள்ளோம். இந்த வழக்கில் 105 சாட்சிகள் உள்ளனர் அதில் சிலரை மட்டுமே இது வரை விசாரித்துள்ளனர். 2 வருடங்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம்.  எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனு குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.