Kanchipuram News: சென்னையில் இடமில்லாததால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க, முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கும் சென்னை இந்தியாவில் முன்னணி நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தொழிற்சாலைகள் நிறைந்த காணப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்கு, வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் நகரமாக சென்னை இருந்து வருகிறது.
உயரழுத்த மின் இணைப்புகள் - High voltage power lines
சென்னையில் இடம் பற்றாக்குறை காரணமாக, பெண்ணை புறநகர் பகுதிகளும் அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. அந்த வகையில் சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பகுதிகள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடங்களாக மாறி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசும், சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைவதற்கான, சிறப்பு ஏற்பாடுகளை செய்து அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், உயரழுத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1000 தாண்டி உள்ளது.
வளர்ச்சியை நோக்கி காஞ்சிபுரம் - Kanchipuram District
தமிழ்நாடு முழுவதும் அனைத்து பிரிவினருக்கும், தமிழ்நாட்டு அரசின் நிறுவனமான மின்சாரத்துறை சார்பில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் அதிகளவு தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த 2023 மார்ச் மாதத்தின் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உயர் அழுத்த மின் இணைப்புகள் எண்ணிக்கையில் சென்னை முதலிடம் பிடித்திருந்தது. சென்னையில் 1409 இணைப்புகள் உள்ளன. இரண்டாம் இடத்தில் கோவையில் 1381 மின் இணைப்புகள் உள்ளன.
ஓராண்டில் முதலிடம் பிடித்து அசத்தல்
தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிக அளவு தொடங்கப்பட்டு வருவதால் உயர் அழுத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 225 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காஞ்சிபுரம் உயர் அழுத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கையில் 1085 இணைப்புகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஓராண்டில் சென்னையில் 16 மற்றும் கோவையில் 44 உயர் அழுத்த மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வருவாய்
காஞ்சிபுரத்திற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 94 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் உயரழுத்த, மின் இணைப்புகளில் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 11,435 உயரழுத்த மின் இணைப்புகள் தற்போது உள்ளன. மாநிலம் முழுவதும் தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்டுகள் உயிரிழத்த இணைப்புகள் மூலம் செலவு செய்யப்படுகின்றன.
கிட்டத்தட்ட மொத்த மின் பகிர்வில் இது, 37 சதவீதமாகும். அதற்கு ஏற்ப அந்த பிரிவிலிருந்து, யூனிட் இருக்கு 11.29 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இது மிகவும் அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரத் துறையும் அதற்கு ஏற்றவாறு, தயாராகி வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.