ஒரு பெண் தனது கணவரான, பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரை செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கணவரை செருப்பால் அடித்த மனைவி


பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் உதவிப் பேராசிரியரான அனில் குமார் திரியா என்பவரை அவரது மனைவி செருப்பால் அடித்து வெளுக்கிறார். சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் அவரது மனைவி பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறைக்குள் நுழைந்து உள்ளே இருந்து அடித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



விடியோவில்…


வெளியாகியுள்ள வைரல் விடியோவில் அவர், "நீங்கள் பெரிய வேலை செய்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா?" என்று அவரது மனைவி அவரிடம் கேட்பதை கேட்க முடிகிறது. இது சிறிது நேரம் நீடித்த பிறகு அந்த உதவிப் பேராசிரியர் காலணிகளை எடுத்து அவர் மீது எறிந்துள்ளார். கதவுகளை மூடிவிட்டு அவரை அடித்த நேரத்தில், சத்தம் கேட்ட நான்கு பல்கலைக்கழக ஊழியர்கள் அந்த இடத்திற்குச் சென்று கதவைத் திறக்கும்படி அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்: பட்டு சொல்றேன்; காதலுக்காக இதை மட்டும் செய்யாதீங்க: பார்த்திபன் சொன்ன ஷாக் தகவல்..


கதவை பூட்டி தாக்குதல்


அவரது மனைவி எதையும் பொருட்படுத்தாததால், அடித்துக்கொண்டே இருந்தார். அனில் குமாரை காப்பாற்ற பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் அனுப்பப்பட்டனர். பேராசிரியர்கள் வெகு நேரம் கேட்ட பின்பு கதவை திறந்து வெளியே வந்துள்ளார். உதவிப் பேராசிரியர் அனில் குமாரின் மனைவி அவரை செருப்பால் அடித்துக் கொண்டிருந்ததை வெளியில் இருந்த பல்கலைக்கழக ஊழியர்கள் முதலில் அறியாமல் இருந்தனர். கதவு பூட்டி இருப்பதாகவும் உள்ளே சத்தம் வருகிறதென மட்டும் நினைத்து கொண்டு திறக்க சொல்லி உள்ளனர்.






சமரசம்


பின்னர், அவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து நிலமையை அமைதிப்படுத்த சில மணி நேரங்கள் ஆனது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த பெண்ணின் நடத்தை குறித்து பலர் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண் தனது கணவரிடம் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டார் என்பது இன்னும் தெரியவில்லை, இருப்பினும், பல்கலைக்கழக வட்டாரங்களின்படி, பிரச்சினை அவர்களுக்கு இடையே தீர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.