கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் என  மகாராஷ்ட்ரா கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 


2019ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை கொரோனா பெருந்தொற்றால், அரசுகள் அதன் பதிவேட்டின் படி ஒரு கணக்கினைச் சொல்லிக்கொண்டு இருந்தாலும் உலகம் முழுவதும் எண்ணற்ற மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை தொற்று பாதிப்பால் 5.27 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமும் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், மகாரஷ்ட்ரா மாநில அரசு ஒரு புதிய அறிவிப்பணையை அறிவித்துள்ளது. இந்த அறிவிபாணையில், கொரோனா பெருந்தொற்றால் பொற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவினை மாநில அரசே முழுமையாக ஏற்கும் என அறிவித்துள்ளது.  


இது குறித்து, மகாரஷ்ட்ரா மாநில கல்வித்துறை அமைச்சர், சந்திரகாண்ட் பட்டில் தெரிவித்துள்ளதாவது, “மாநில அரசு இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு, இரண்டு கோடி ரூபாய் செலவு செய்கிறது. இதில், தற்போது, 931 இளங்கலை படிக்கும் மாணவ மாணவிகளும், 228 முதுகலை மாணவ மாணவிகளும் படித்து வருகின்றனர். மேலும், இவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.