உத்தரப் பிரதேசம், ஆக்ரா மாவட்டத்தில் நாய்க்குட்டியை பெண் ஒருவர் கொடூரமாக அடித்துத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சாலையில் செல்லும் குட்டி நாய் ஒன்றை இழுத்து அடிக்கத் தொடங்கும் அப்பெண், தொடர்ந்து வெறி பிடித்தாற்போல் கொடூரமாக அதனைத் தூக்கி சுழற்றியடிக்கும் காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.


இறுதியாக அருகில் நிற்பவர்கள் வந்து தடுக்கும்போது அப்பெண் அடிப்பதை விட்டு இடத்தை விட்டு நகர்கிறார். ஈவு இரக்கிமின்றி குட்டி நாயை கடுமையாகத் தாக்கும் இந்தப் பெண்ணின் வீடியோ முன்னதாக இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.






இந்தப் பெண் குறித்து வேறு எதுவும் தகவல்கள் வெளியாகாத நிலையில், ஆக்ரா காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


இதேபோல் முன்னதாக இரு கண்களுக்கு நடுவே கிட்டத்தட்ட நெற்றிபொட்டில் சுடப்பட்ட நாய் ஒன்று அதிசயமாக உயிர் தப்பிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்தது.


ஆர்த்தர் எனப்படும் இந்த நாய் முன்னதாக தான் வளர்க்கப்பட்டு வந்த பண்ணையில் இருந்து காணாமல் போனது. தொடர்ந்து அதன் உரிமையாளர் நாயைத் தேடி வந்த நிலையில், இரு கண்களுக்கு இடையே குண்டடி பட்ட வண்ணம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நாயைக் கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.


தொடர்ந்து முகத்திலும் தலையிலும் கடும் வலியோடு இருந்து வந்த நாய் ஆர்த்தருக்கு பென்சில்வேனியா சொசைட்டி ஃபார் த ப்ரவென்ஷன் ஆஃப் க்ரூயல்டி டு அனிமல்ஸ் (பிஎஸ்பிசிஏ) குழுமம் சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளது.


முன்னதாக இந்த நாயின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இக்குழுமம், ”ஆர்தரின் முகத்தில் வித்தியாசமான கோணத்தில் சுடப்பட்டுள்ள நிலையில், அதிசயமாக குண்டு மூளையை துளைக்காமல் விட்டுள்ளது.


நாயின் சுவாசப்பாதை, வாய்ப் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


 



ரத்த சோகையும், காது தொற்றும் ஏற்பட்டுள்ளது. எனினும் ஆர்த்தர் சிறப்பாக தேறி வருகிறது. மருத்துவமனையில் தனது நாள்களை செலவழித்து வரும் ஆர்த்தர், இப்போது நன்றாக மூச்சு விடுகிறது” எனத் தெரிவித்திருந்தது.




மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!


Pitbull: தொடரும் ’பிட்புல்’ இன நாய்களின் கொடூர தாக்குதல்... ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை விதிக்க பீட்டா அழுத்தம்...