ஆசிரியர்கள் பணி நியமன ஊழலில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் பார்த்தா சாட்டார்ஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுள்ளார். 


பார்த்தா சட்டார்ஜி கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது ஆசிரியர்கள் பணி நியமனத்தில்  பல கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்திருப்பது அமலாக்கப்பிரிவு துறை சோதனையில் தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 


 










இந்நிலையில், தற்போது தொழில்துறை அமைச்சர் பதவி வகித்து வந்த பார்த்தா சட்டர்ஜியை (partha chatterjee) அமைச்சரவையில் இருந்து நீக்கி முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  






கடந்த ஆட்சி காலத்தில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பார்த்தா சட்டர்ஜி, இவர் ஆசியர்கள் பள்ளி நிமயனத்தில் பல்வேறு கோடி மதிப்பில் ஊழல் செய்தாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து புலனாய்வுத் துறை அவருக்குச் சொந்தமான அலுவலகம், வீடுகளில்  சோதனை நடத்தினர். இதில் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கம், லேப்டாப் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவருடைய உதவியாளர் Arpita Mukherjee வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. தங்கம் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 






இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பார்த்தா சட்டர்ஜி மற்றும் அபிதா முகர்ஜி இருவரும் கைது செய்யப்பட்டனர்.


 


 




Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வீரர்கள் பேருந்தில் பயணம்.