4ஜி சேவையை வழங்கும் விலையிலேயே 5ஜி சேவையை வழங்க டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தின் அதிவேக சேவை அனுபவத்தை பயனாளர்களுக்கு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், பொழுதுபோக்கு மற்றும் தொலை தொடர்பை முற்றிலுமாக மாற்றியமைத்து தரவு பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டெலிகாம் நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
லாபத்தை ஈட்டும் வகையில், 5ஜி சேவை விலையை 4ஜியை விட அதிக விலைக்கு விற்க சில வயர்லெஸ் ஆபரேட்டர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், 5ஜி நெட்வொர்க் விரிவுபடுத்துதல், குறைந்த அளவில் இருக்கும் விலை குறைந்த 5ஜி உபகரணங்கள், உலகளவில் 5ஜி சேவை விற்கப்படும் விலை ஆகியவற்றின் காரணமாக 5ஜி சேவைக்கான விலையை நிறுவனங்கள் மாற்றாது என டெலிகாம் நிறுவனங்களின் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மெட்ரோ நகரங்கள் அல்லது அதிக மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கு மட்டுமே 5G கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது, குறைந்தபட்சம் ஆரம்பத்தில், சேவையை அதிக விலைக்கு விற்பது நுகர்வோரை ஈர்க்காது என அவர்கள் கருதுகின்றனர்.
மே மாதம், முதலீட்டாளர்களுடனான ஆலோசனைக்கு பிறகு, 5ஜி நெட்வொர்க் விரிவாக்கம் மிதமானதாதவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கோபால் விட்டல் தெரிவித்திருந்தார்.
முக்கியமாக, இந்தியாவில் உள்ள 600 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்களில் 5-7% பேர் மட்டுமே 5G கைபேசிகளைக் கொண்டுள்ளனர். எனவே 5G-ஐ தயார் நிலையில் மக்கள் ஏற்பதற்கு இன்னும் சிறிது காலமாகும்.
இதற்கு மத்தியில், இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான் இரண்டாம் நாள் ஏலம் நேற்று நிறைவுற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, அதானி குழுமம் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ள நிலையில், 5-வது சுற்று ஏலம் நேற்று நடைபெற்றது. இரண்டாம் நாள் ஏல நேர முடிவில், 1.49 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஏலம் கேட்கப்பட்டது.
அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதால், கடந்த இரண்டு ஏலத்தில் விற்பனையாகாத 700 MHz ஸ்பெக்டரம் பேண்டை இரண்டாம் நாளன்று, நிறுவனங்கள் ஏலத்தில் கேட்டன. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்