கேரளாவில் மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்ட கலெக்டர் கீதா கதகளி நடனம் அரன்கேற்றம் செய்துள்ளார்.


கலெக்டர் கீதாவுக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஈடுபாடு உடையவர். பள்ளிப் பருவத்தில் இருந்தே பல்வேறு மேடைகளில் நடனம் ஆடி பரிசுகள் பெற்றுள்ளார். ஆனாலும், கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடனக் கலை கதகளி மீது, அவருக்கு மிகுந்த ஈர்ப்பு இருந்தது.


 இதையடுத்து,கலெக்டராக பொறுப்பேற்ற பின்னரும்,  தன் பணிகளுக்கு இடையிலும் கதகளி நடனத்தை முறைப்படி கற்றுக் கொண்டார். அரங்கேற்றம் செய்வதற்காக மாநில அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றார்.


இதை தொடர்ந்து, அரசின் அனுமதி கிடைத்த நிலையில், வயநாட்டில் நடந்த கலாச்சார விழாவில் கதகளி நடனத்தை அரங்கேற்றம் செய்தார். ஓய்வு பெற்ற மாவட்ட திட்ட அதிகாரி சுபத்ரா நாயர், மண்வள பாதுகாப்பு துறை அதிகாரி ரதி சுதிர் மற்றும் நடனக் கலைஞர்கள் கீதாவுடன் இணைந்து நடனம் ஆடினர்


சமூக வலைதளம்கடந்த செப்டம்பரில் வயநாடு கலெக்டராக பொறுப்பேற்ற கீதா, சில மாதங்களுக்கு முன், அங்குள்ள காப்பகம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடி ஆச்சரியப்படுத்தினார்.அதேபோல் மலையாளத்தின் கொச்சு கொஞ்சம் சந்தோஷங்கள் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடலுக்கு கீதா நடனமாடிய வீடியோ, சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது.


இதற்கு ஒரு அதிகாரி. கதகளியில் தேர்ச்சி பெறுவதற்கான அவரது தீவிர ஈடுபாட்டுடன் கூடிய முயற்சிகளுக்கு நன்றி, வள்ளியூர்காவு திருவிழா போன்ற பிரபலமான மேடையில் அவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியூள்ளது மகிழ்ச்சியான ஒன்று என்றார்.


“சிறுவயதில் இருந்தே பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் பல்வேறு நிலைகளில் கச்சேரி செய்துள்ளேன். ஆனால் கதகளியில் இதுதான் எனது முதல் அனுபவம்” என்று கீதா ஆங்கில பத்திரிக்கையான இந்துவிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.


“அலுவலக நேரத்திற்குப் பிறகு, கோட்டைக்கால் உன்னிகிருஷ்ணனிடம் கதகளியின் படிகளையும் முத்திரைகளையும் கற்றுக் கொள்வதற்காக நான் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை செலவிட்டேன். இதற்கு பரதநாட்டியத்தில்  எனக்கிருகும் நீண்ட அனுபவமும் சிறப்பாக செயல்பட உதவியது,” என்றும் கூறினார்.


கோட்டக்கல் சந்தோஷ் மற்றும் ஏ.வினீஷ் பாடல்களை பாடியுள்ளனர். செண்டத்தில் மணீஷ் ராமநாதனும், மத்தளத்தில் கோட்டக்கல் சபரீஷும் தாள வாத்தியம் வழங்கினர். கே.பத்மநாபன், பி.ராஜீவ், வி.ரவி ஆகியோர் மேக்கப் செய்ய, ரங்கஸ்ரீ ஞானம்குருசி அணிகலன்களை வடிவமைத்துள்ளார்.


 


Microplastics Found in Human Blood | ரத்தத்தில் பிளாஸ்டிக்.. பீதியை கிளப்பும் ஆய்வு முடிவுகள்.. | Microplastic Pollution


சிறந்த நடிருக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் வில் ஸ்மித்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண