ஒரு மாநிலத்தில் மதம் மற்றும் மொழி அடிப்படையிலான இந்துக்களை சிறுபான்மையினர் என அறிவிக்கும் அதிகாரம் சில மாநிலங்களுக்கும் இருக்கிறது. அதை செயல்படுத்துவது குறித்து மாநிலங்கள் பரிசீலணை செய்யலாம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் உச்ச நீதிமன்றத்திடம் அளித்துள்ள பிரமாணபத்திரத்தில்,  “கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் ஜெயின்கள் ஆகிவைகள் தேசிய அளவில் சிறுபான்மையினராக அறிவித்துள்ள நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மதம் மற்றும் மொழி அடிப்படையில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும். அந்த அதிகாரம் மாநில அரசிற்கு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.


ஒரு மாநிலத்தில்  குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை சிறுபான்மையினராக  அறிவிப்பது என்பது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் வரம்பிற்கு உட்பட்டது  என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் (என்சிஎம்இஐ) சட்டம், 2004 இன் பிரிவு 2(எஃப்) (Section 2(f) of the National Commission for Minority Educational Institutions (NCMEI) Act, 2004 ) பிரிவின் கீழ், சிறுபான்மையினரை அடையாளம் கண்டு அவர்களுக்கான நலன் கிடக்கும் வகையில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு தனது பதிலை அளித்துள்ளது.






வழக்கறிஞர் அஷ்வானி துபே மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், லடாக்கில் 1%, மிசோரமில் 2.75%, லட்சத்தீவில் 2.77%, ஜம்மு-காஷ்மீரில் 4%, நாகாலாந்தில் 8.74%, மேகாலயாவில் 11.52%, அருணாச்சலத்தில் 29% இந்துக்கள் மட்டுமே உள்ளனர். பிரதேசம், பஞ்சாபில் 38.49%, மணிப்பூரில் 41.29%. இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2016 ஆம் ஆண்டில் ,மகாராஷ்டிரா மாநிலம் யூதர்களை சிறுபான்மையினராக அறிவித்ததையும், கர்நாடகா மாநிலம் உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி, துளு, லமணி, ஹிந்தி, கொங்கனி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளை சிறுபான்மை மொழிகளாகவும் அறிவித்துள்ளது. அதேபோன்று, ஒரு மாநிலத்தில் வாழும் இந்துக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்கள் மொழி மற்றும் மதம் அடிப்படையில் குறைவாக இருப்பின் அவர்களை சிறுபான்மையினராக அறிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.


 மகாராஷ்டிரா அரசு யூதர்களை சிறுபான்மை சமூகமாக 2016ல் அறிவித்தது.கர்நாடகா அரசு உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி, துளு, லமணி, ஹிந்தி, கொங்கனி, குஜராத்தி ஆகிய மொழிகளை சிறுபான்மை மொழிகளாக அறிவித்தது. அந்த மாநிலத்தின் விதிகளின்படி நிறுவனங்களை சிறுபான்மை நிறுவனங்கள் என மாநிலங்களும் சான்றளிக்கலாம் என்று உறுதிமொழி கூறுகிறது.