உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால், 2020ம் ஆண்டு முதல் உலகம் முடங்கும் நிலை உருவாகியது.  இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஊரடங்கால் உலக நாடுகள் அவதிப்பட்டு வருகின்றன.


இந்தியாவிலும் முழு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வந்தது. மத்திய அரசு சார்பில் பொதுமக்கள் மத்தியில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. அவற்றில், கடந்த 2020ம் ஆண்டு முதல் அனைத்து தொலைபேசி அழைப்புகளின்போதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காலர் டியூனாக அறிமுகப்படுத்தப்பட்டது.




இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், நாட்டில் பெரும்பாலான மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுவிட்டனர். இந்த நிலையில், இந்த விழிப்பணர்வு காலர்டியூனை நிறுத்திக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் முக்கியமான மற்றும் அவசர அழைப்புகள் மிகவும் தாமதமாகுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.


மேலும் படிக்க : Crime: ஆண் நண்பர்களுடன் பழகாதே: கண்டித்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த 17 வயது சிறுமி!


இதையடுத்து, இந்த விழிப்புணர்வு காலர்டியூனை கைவிடுமாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தொலைத்தொடர்புத்துறை சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது. அந்த கடித்தில் , “ சுமார் 21 மாதங்களாக செயல்பாட்டில் உள்ள கொரோனா காலர்டியூன், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நோககத்தை நிறைவேற்றி உள்ளது. தற்போது அதற்கு அவசியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.




இதையடுத்து, செல்போன்களில் ஒலித்து வரும் கொரோனா விழிப்புணர்வு காலர்டியூனை கைவிடுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மேலும் படிக்க : Udhagai Crime: மொத்தம் 5 பேர்! வரிசைக்கட்டி மலர்ந்த காதல்! இடையூறாக இருந்த குழந்தை.. மதுவை கொடுத்து கொன்ற தாய்!


மேலும் படிக்க : மணிப்பூர் : ஏப்ரல் 1 முதல் அனைத்து அலுவலகங்களுக்கும் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண