94ஆவது ஆண்டாக நடைபெறும் ஆஸ்கர் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை 'கிங் ரிச்சர்ட்' படத்தில் செரீனா மற்றும் வீனசின் தந்தை வேடத்தில் நடித்த வில் ஸ்மித் வென்றுள்ளார்.


’கிங் ரிச்சர்டு’ என்ற படம்  பிரபல டென்னிஸ் சகோதரிகள் வீனஸ் வில்லியம்ஸ் - செரீனா வில்லியம்ஸ் ஆகியோரை சாதனைப்பெண்களாக உருவாக்க அவர்களது தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸ் சந்தித்த சவால்களை விளக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 


’ஒரு கலை படைப்பு என்பது வாழ்க்கையை பிரதிபலிப்பதுதான். நான் பைத்தியக்காரத் தந்தையைப் போல் நடித்திருப்பேன். ஆனால் அன்பு உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்ய வைக்கும்.’ என்று தான் நடித்த கிங்க் ரிச்சர்டு திரைப்படம் பற்றி பேசினார். இதன் மூலம் 20 ஆண்டுகால கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக முதன் முறையாக ஆஸ்கார் விருதை பெற்றுள்ளார் வில் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.


 






 


ஆஸ்கர் விருதைப் பெற்ற பிறகு, தனது உணர்ச்சிவயமிக்க ஏற்பு உரையில், ஸ்மித், ‘உங்களைப் பற்றி மக்கள் தவறாக பேசுவார்கள். கேலிக்கு உள்ளாக்குவார்கள். இந்தத் தொழிலில் உங்கள் முன் வரும் அவமரியாதைகளை புன்சிரிப்புடன் கடக்க வேண்டும். பரவாயில்லை என்று எண்ணி முன்னேற வேண்டும்.’ என்றார்.


ஸ்மித் தனது சினிமா வாழ்க்கையை 1990 இல் தி ஃப்ரெஷ் பிரின்ஸ் ஆஃப் பெல்-ஏர் இல் தொடங்கினார். அவரது தலைமுறையின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான வளர்ந்தார்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண