அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அங்குள்ள பூங்கா ஒன்றில் ஜாகிங் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், முதலமைச்சர் மம்தா பானர்ஜி  12 நாள் பயணமாக, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் சென்றுள்ளார்.  இந்த பயணத்தில் மேற்கு வங்க வம்சாவளியினரை சந்திக்கும் அவர், தொழில் கூட்டமைப்பு மாநாட்டிலும் பங்கேற்கிறார்


மம்தா பானர்ஜி ஜாஜிங் வீடியோ


மாட்ரிட் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் மம்தா பானர்ஜி புடவை,ஸ்லிப்பர் உடன் ஜாஜிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 






“ புத்துணர்வை வழங்கும் காலை.. ஜாகிங் செல்வது ஒரு நாளுக்கான ஆற்றலை வழங்கும். ஸ்டே ஃபிட். ஆரோக்கியமாக இருங்கள்.” என்று குறிப்பிட்டு மம்தா பானர்ஜி வீடியோவை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தன்னுடன் வெளிநாடு வந்திருந்த அதிகாரிகளுடன், அதிகாலையில் ஜாக்கி செல்லும் வீடியோ தான் அது. அப்போதும் தான் அணியும் வெள்ளை நிற பருத்திச் சேலை, சாதாரண செருப்பும் அணிந்திருந்தார். 


5 ஆண்டுகளில் முதல் முறை நாங்கள் வெளிநாடு சென்று 5 ஆண்டுகள் ஆகிறது. ஏனெனில் மத்திய அரசு தேவையான அனுமதியை முன்னதாக வழங்கவில்லை. இந்த ஆண்டு சர்வதேச கொல்கத்தா புத்தகக் கண்காட்சியின் கருப்பொருள் நாடாக ஸ்பெயின் இருந்தது. அவர்கள் உற்பத்தி மற்றும் பிற தொழில்களில் சிறந்தவர்கள். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 3 நாட்கள் தங்கியிருந்து வணிக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.


அங்கிருந்து இரயிலில் பார்சிலோனா நகருக்கு சென்று, அங்கு நடைபெறும் வணிக உச்சி மாநாட்டிற்கான 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பின்னர் மீண்டும் துபாய்க்கு திரும்பி அங்கு நடைபெறும் வணிக மாநாட்டில் கலந்துகொள்வோம். மேற்குவங்காளம் திரும்புவதற்கு முன்பு சில நாட்கள் துபாயில் தங்கியிருந்து பல்வேறு முக்கிய சந்திப்புகள் நடைபெற உள்ளது.




மேலும் வாசிக்க..Nipah Virus: அச்சுறுத்தும் நிபா: மாஹேவில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு