கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் பல நீர் நிலைகள் உயர்ந்துள்ளன. சாலைகள் சில வெள்ளக்காடுகளாக காட்சியளிக்கின்றன. இந்த சூழலில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்று வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.






கேரளா வயநாடு மாவட்டத்தில் உள்ள  மீனங்காடி ஊராட்சிக்கு உள்பட்ட இரண்டு வார்டுகளை இணைக்கும் சாலை திடீரென குண்டும் குழியுமாக மாறியது. அந்த பகுதியின் அப்பாட்-ஆலிலக்குன்னு சாலையில் மக்கள் அதிகமாக கூடியதால் , அந்த சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டு கால்வாய் போல மாறியது.  பின்னர் அந்த சலை வெள்ளத்தால் மூழ்கி அடித்துச்செல்லப்பட்டது. அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து நெற்பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.






கேரளா மாநிலத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணையின் ஷட்டர்களைத் திறந்து, நீர்த்தேக்கத்தில் உள்ள உபரி நீரை வெளியேற்ற அம்மாநில அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். அந்த அளவுக்கு கன மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாடு , கேரளா, தெலுங்கானா , லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காரணமாக மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க : Pakistan Flood : நாட்டையே புரட்டிப்போட்ட பெருவெள்ளம்.. பாகிஸ்தானில் 1300 பேர் உயிரிழப்பு.. 5 லட்சம் பேருக்கு இந்த கதி!!