பண்டிகை காலங்கள் என்றாலே கொண்டாட்டம்தான். இந்தியாவில் பெருவாரியான மக்கள் சரஸ்வதி பூஜை, நவராத்திரி , தீபாவளி , விநாயகர் சதுர்த்தி, உள்ளிட்ட பல விழாக்களை ஒருமித்தே கொண்டாடுகின்றனர். குறிப்பாக திருமணம் நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக கொண்டாடுவது என்பது வழக்கமான ஒன்று.


நம்ம ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஏதாவது பாட்டு சத்தம் கேட்டால் நம்மையே அறியாமல் ஒரு உத்வேகம் பிறக்கும். அப்படிப்பட்ட ஒரு கல்யாண நிகழ்ச்சியில் பாட்டு ஒலிக்கு இளைஞர் ஒருவர் நடனமாடும் ஒரு வீடியோத்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இணையத்தை கலக்கும் வீடியோ


சோமெட்டோவின் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் திருமண வீட்டிற்கு முன்னால் நின்று, அங்கு ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






சோமெட்டோவில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வெயில் மழையென்று பாராமல் எல்லா நேரத்திலும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்து வருகின்றனர். மக்களுக்கு உரிய நேரத்தில் உணவை டெலிவரி செய்கின்றனர். சில நேரம் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் உணவை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவசரமாக சென்று உணவை விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் பல ஊழியர்கள் விபத்தை சந்தித்து வருவதையும் பார்க்க முடிகிறது.


உணவு விநியோகிப்பவர் நடனம்:


இதுபோன்ற கஷ்டமான சூழ்நிலையிலும் தனது கஷ்டத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்கின்றனர். அதுபோன்று தான் ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண வீட்டின் மாடியில் உறவினர்கள் அனைவரும் நடனமாடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் டெலிவரி அவரது வீட்டிற்கு முன்னால் நின்று, அங்கு ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றவாறு டான்ஸ் ஆடி மகிழ்ந்தார்.


இந்த வீடியோவானது,  தற்போது வரை 46,000-க்கும் அதிகமானோர் கண்டு ரசித்திருக்கின்றனர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளை தெரிவித்துள்ளர். புல்கி கோச்சர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த வீடியோ , இதுவரையில் 6,233 லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் பலர் ” இசைக்கு எல்லை இல்லை, என்பது போல் இவரது நடனம் உள்ளது. “  என இந்த வீடியோவிற்கு கீழ் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.




மேலும் படிக்க


1.5 டன் தக்காளிகளை பயன்படுத்தி உலகின் மிகப்பெரும் சாண்டாகிளாஸ்...! மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அசத்தல்..!