நாள் முழுவதும் நேரம் காலம் பாராமல் பரபரப்பான சாலைகளில் நின்று போக்குவரத்தை இயக்குவதும் கண்காணிப்பதும் என போக்குவரத்துக் காவலர்களின் பங்கு நம் தினசரி வாழ்வில் இன்றியமையாததாகவே உள்ளது.
ஆனால், சமீபகாலமாக ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய போக்குவரத்து காவலர், வாகன ஓட்டிகளிடம் தேவையின்றி கடுமை காட்டும் போக்குவரத்துக் காவலர்கள் என சர்ச்சைக்குரியவர்களையே செய்திகளில் பார்த்து வருகிறோம்.
நெட்டிசன்கள் பாராட்டு மழையில் போக்குவரத்துக் காவலர்
இவற்றுக்கு விதிவிலக்காக, தன் வழக்கமான வேலைகளைத் தாண்டி சமூக அக்கறையுடன் செயல்பட்ட போக்குவரத்துக் காவலர் ஒருவர் நெட்டிசன்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார்.
மேலும் படிக்க: Mars : ”பளபளக்குற பகலா நீ” செவ்வாயில் மின்னும் பொருள்: நாசா எடுத்தனுப்பிய புகைப்படமும், அதன் சுவாரஸ்யமும்
சத்தீஸ்கர் கேடர் ஐஏஎஸ் அலுவலரான அவனிஷ் ஷரன், தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், பரபரப்பான சாலையில் சிவப்பு விளக்கு நிறுத்தத்தின்போது போக்குவரத்துக் காவலர் ஒருவர் துடைப்பானைக் கொண்டு சாலையில் விழுந்துள்ள சிறு கற்கள் உள்ளிட்டவற்றை கூட்டித் தள்ளுகிறார்.
இதயங்களை வென்ற சமூக அக்கறை
தன் காவலர் பதவியை கருத்தில் கொள்ளாமல் பரபரப்பான சாலையில் சமூக அக்கறையுடன் செயல்பட்ட இந்தக் காவலரின் வீடியோ நெட்டிசன்களை இதயங்களை வென்று வருகிறது.
9.6 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் இந்த வீடியோ, 54 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
இன்ஸ்டாவில் சல்யூட்
”மேலும், கடமையை விட மனிதத்தன்மையே சிறந்தது என இவர் நிரூபித்துள்ளார்” என்றும் ”இந்த சிறந்த போக்குவரத்துக் காவருக்கு சல்யூட்” என்றும் அவரைப் பாராட்டி நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Elon Musk : ஏலியன்கள், ட்விட்டரில் ஆட்குறைப்பு, சமையல் கட்டு, வீக்கான இண்டெர் கனெக்ஷன்.. கன்டென்ட்டாக களைகட்டும் எலான் மஸ்க்..
North Korea: பகீர் கிளப்பிய செய்தி.. வடகொரியாவில் பரவும் புதிய வகை குடல் தொற்று..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்