நாசாவின் பெர்செவரன்ஸ் மார்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் ஒரு பாறையில் சிக்கியிருக்கும் பளபளப்பான படலத்தின் எதிர்பாராத படத்தைப் படம்பிடித்துள்ளது. ரோவர் மற்றும் இன்ஜெனிட்டி மார்ஸ் ஹெலிகாப்டரை தரையிறக்கிய ராக்கெட்டின் ஒரு பகுதியில் இருந்து வந்திருக்கக்கூடிய வெப்பப் படலத்தின் ஒரு பகுதிப் படலமாக இது இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். .

Continues below advertisement

Continues below advertisement

ஆனால் சுவாரஸ்யம் என்னவென்றால், ராக்கெட் இறங்கும்போது  சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில்தான் விபத்துக்குள்ளானது. எனவே, அந்த பொருள் இறங்கும் போதே அங்கு தரையிறக்கப்பட்டதா அல்லது செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட காற்றால் அங்கு வீசப்பட்டதா என்பது விஞ்ஞானிகளுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

"எங்களது குழு எதிர்பாராத ஒன்றைக் கண்டறிந்துள்ளது: இது ஒரு வெப்பப் படலத்தின் ஒரு பகுதி, இது எங்களது ராக்கெட்டில் இருந்து வந்திருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள், ராக்கெட்-இயங்கும் ஜெட் பேக், 2021ல் தரையிறங்கும் நாளில் எங்களை அது இங்கே இறக்கியது" என்று பெர்ஸ்வெரன்ஸ் ரோவர் குழு ட்வீட் செய்தது. ஜூன் 13 அன்று ரோவரின் இடதுபுற மாஸ்ட்கேம்-இசட் கேமராவால் கிளிக் செய்யப்பட்ட படத்தில், குறுக்கே புள்ளிகளுடன் கூடிய படலம் தெளிவாகத் தெரிவதைக் காணலாம்."