உலகம் முழுதுவம் இன்னும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாத நிலையில், வடகொரியாவில் புதிதாக குடலைப் பாதிக்கும் வகையிலான நோய் தொற்று பரவி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
வட கொரியா கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதற்கே போராடி வருகிறது. இந்நிலையில், அங்கு புதிய வகை குடல் தொற்று பரவல் அதிகரித்திருப்பதாக அந்நாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
வட கொரியாவில் உள்ள ஹேஜூ நகரில் குடல் மற்றும் செரிமான மண்டலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தொற்று சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட கொரியாவின் ஹேஜூ (Haeju) நகருக்கு அதிபர் கிம் ஜான் உன்(Kim Jong Un) பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கியுள்ளார். ஹேஜூ நகரில் மக்கள் "acute enteric epidemic" என்ற தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. Enteric என்பது வாய் முதல் செரிமான மணடலம் வரையிலான பாதையைக் குறிக்கிறது. புதிய வைரஸ் இந்தப் பாதையில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
இந்த தொற்று ச்காதாரமில்லாத உணவு மற்றும் நீர் மூலம் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று டைஃபாய்டு, காலரா, போன்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், 1990 ஆம் ஆண்டிற்கு பிறகு வட கொரியாவில் சுகாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளாதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன் காரணமாகதான் வட கொரியாவில் இதுபோன்று வைரஸ் தொற்றுகள் பரவுவது மிகச் சாதராணமாக ஒன்று என்றும் பார்க்கபப்டுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்