ரயிலுக்கு அருகே வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


செல்ஃபி மோகத்தாலும் டிக் டாக் போன்ற  ஆப்களுக்கு வீடியோ எடுக்கும் ஆர்வத்தாலும் பல உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன. அப்படியான ஒரு சம்பவம் தற்போது மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.  சஞ்சு என்ற 22 வயதான இளைஞர் இட்டார்சி - நாக்பூர் ரயில்வே ட்ராக்கில் தன் நண்பருடன் சென்றுள்ளார்.  அப்போது அந்த ட்ராக் வழியாக சரக்கு ரயில் வந்துள்ளது. அந்த ரயிலை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுக்க நினைத்த சஞ்சு தன் நண்பரிடம் செல்போனை கொடுத்துவிட்டு ரயில்வே ட்ராக்கின் மிக அருகிலேயே நின்று போஸ் கொடுத்துள்ளார். 


>>Amazon | மொத்தம் ரூ.1.64 கோடி மதிப்பு.. அமேசான் பொருட்களை அப்படியே லபக்க நினைத்த கும்பல்.. பரபர சேஸிங்..




பொதுவாக ரயிலானது ட்ராக்கில் செல்லும் போது தண்டாவளத்தின் பக்கவாட்டின் இரு புறத்திலும் சில அடிகளை கவர் செய்தே செல்லும். இது தெரியாமல் ட்ராக்கின் அருகிலேயே நின்ற இளைஞர் மீது சரக்கு ரயில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இளைஞர் படுகாயமடைந்தார். உடனடியாக இளைஞரை மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள் படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, இளைஞரைக் கண்டதும் சரக்கு ரயில் ஓட்டுநர் தொடர்ந்து ஒலி எழுப்பி இளைஞரை எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இளைஞர் வீடியோவில் ஆர்வமாக இருந்த நிலையில் விபத்து நடந்துள்ளது


>>GST Increase on Clothes : பொதுமக்கள் கவனத்திற்கு, ஜவுளி ஆடைகள், காலணிகளுக்கு உயரும் ஜி.எஸ்.டி.. விவரம்..


ரயில்வே பாதைகளில் மிகக் கவனமுடன் கடக்க வேண்டுமென தொடர்ந்து எச்சரிக்கை கொடுக்கும் நிலையில் வேண்டுமென்றே ரயில் அருகே நின்று வீடியோ எடுத்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண