இயக்குநர் பரதனின் மனைவியும் பிரபல குணச்சித்திர நடிகையுமான லலிதா உடல் நலக்குறைவு காரணமாக தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். தென்னிந்திய மொழிகளில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் லலிதா. இவர் தமிழில் உள்ளம் கேட்குமே, காற்று வெளியிடை, அலைபாயுதே, கிரீடம், காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது நடித்து வந்தாலும் மலையாலத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார் லலிதா. கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். தொடர்ச்சியாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் குட்டி மனோரமாவாகவே பார்க்கப்படும் லலிதாவுக்கு கல்லீரலில் பிரச்னை என்று கூறப்படுகிறது. 


அண்ணாத்தக்கு ஒரு நியாயம்... மாநாட்டிற்கு ஒரு நியாயமா...? பாய்ண்ட் பிடித்த கஸ்தூரி!




அதன் காரணமாகவே அவர் சிகிச்சைபெற்று வருவதாகம் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அவரது மருத்து சிகிச்சையை ஏற்பதாக கேரள அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாலே குணமடைய முடியும் என்பதால் கல்லீரலுக்காக லலிதாவின் குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.


ஒரே ரத்தவகை, ஆரோக்கியமான கல்லீரல் இருந்து  யாரேனும் முன்வந்தால் கல்லீரல் தானம் செய்யலாம் என்றும் லலிதாவின் மகள் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்  கலையுலகில் வாழ்ந்த லலிதாவுக்கு கலையுலகில் இருந்தே கல்லீரம் கிடைக்கவுள்ளது. லலிதாவின் தீவிர ரசிகரும், கேரள நாடகக் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமாக கலாபவன் என்பவர் லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார். 


Kamalhaasan | பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல்.. அவருக்கு பதில் இவரா? செம்ம எதிர்பார்ப்பு


இது குறித்து தெரிவித்துள்ள அவர், நடிகை லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய முடிவெடுத்துள்ளேன். இது தொடர்பாக மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்துள்ளேன். 54 வயதான எனக்கும், லலிதாவுக்கும் ஒரேவகை ரத்தம்தான். எனக்கு மது, புகைப்பழக்கம் இல்லை. எனவே என் கல்லீரல் அவருக்கு சரியாக பொருந்தும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.


கல்லீரம் தானம் செய்ய முன்வந்துள்ள கலாபவனுக்கு பலரும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர். இருவருமே விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றும், அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண