watch Video: கர்நாடக மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண்ணை, கோபத்தில் கர்நாடக அமைச்சர் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் சாமராஜநகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தில் நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சரான சோமண்ணா பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது. அப்போது அதை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண்ணுக்கு நிலப்பட்டா கிடைக்காததால் அமைச்சரிடம் அதை பற்றி கூறினார். அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைச்சர், ஆத்திரமடைந்து அந்த பெண்ணை அறைந்தார். அந்த பெண் தாக்கப்பட்ட போதிலும் அமைச்சரின் காலில் விழுந்தார் எனக் கூறப்படுகிறது. தனக்கு பட்டா வேண்டும் எனக் கோரி அழுதப்படி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக நில வருவாய் சட்டத்தின் 94சி பிரிவின் கீழ் கிராமப்புறங்களில் நிலத்தை முறைப்படுத்துவதற்கான உரிமைப் பத்திரங்களுக்கு சுமார் 175 பேர் தகுதி பெற்றுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு, வருவாய்த் துறையின் கீழ் தனக்கு நிலம் வழங்கப்படாததால் அதனை குறித்து அமைச்சரிடம் கூறுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஆத்திரமடைந்த அமைச்சர் சோமண்ணா அந்த பெண்ணை அறைந்ததாக கூறப்படுகிறது. பின்பு அந்த பெண்ணிடம் அமைச்சர் சோமன்னா மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க நிர்வாகிகள் பொது இடங்களில் மக்களை துஷ்பிரயோகம் செய்வது இது முதல் முறையல்ல என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட, செப்டம்பர் 3ம் தேதி, கர்நாடக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி ஒரு பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். தனது நிலத்தில் உள்ள வீட்டை இடிப்பதை எதிர்த்துப் போராடிய ஒரு பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியது என சொல்லப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு கல்லூரியின் முதல்வரை ஜனதா தளம் நிர்வாகி ஒருவர் அறைந்தார். கல்லூரிக்கு ஆய்வுக்கு சென்ற அவர், உட்கட்டமைப்பு வசதி குறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது அவர் முறையாக பதிலளிக்காததால் ஆத்தரமடைந்த ஜனதா தளம் நிர்வாகி கல்லூரி முதல்வரை அறைந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.