தீபாவளி வந்தாலே வித விதமான வைரல் வீடியோக்கள் பகிரப்படுவதும் வழக்கம். அந்த வகையில்  தற்போது  ஒரு நபர் சிகெரெட்டை வைத்து ராக்கெட் வெடியை  பற்ற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


வைரல் வீடியோவில் இருப்பவர் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மொல்லா சஞ்சீவ ராவ். இந்த வீடியோ எடுக்கப்பட்ட ஆண்டு 2018 . விவசாயியான இவர் ஒரு சிறிய பட்டாசு ஆலையை நடத்தி வந்துள்ளார். பிரஜா சங்கல்ப யாத்திரையின் போது ஜெகன் மோகன் ரெட்டியை வரவேற்க நின்றிருக்கிறார். அப்போதுதான் இந்த விபரீத சாகசங்களை செய்திருக்கிறார். இதனை ட்விட்டரில் பகிர்ந்த  நந்தா என்னும் நபர் “நாசாவை கண்டுபிடித்தவர் நிச்சயமாக இந்தியாவைச் சேர்ந்தவர்" என கேப்ஷன் கொடுக்க இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ராவ் வெறும் 20 வினாடிகளில் 11 ராக்கெட்டுகளை பறக்க விட்டு நெட்டிசன்களை கவர்ந்திருகிறார்.






 


நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் :



இதனை கண்ட நெட்டிசன்கள் “ இவர்தான் ஒரிஜினல் ராக்கெட் மேன் “ , “எலான் மஸ்க்கும் ராக்கெட் ஏவுவதற்கு முன்னதாக இப்படித்தான் இருந்தாராம் “, “ எலான் மஸ்க் உங்க ஸ்பேஸ் எக்ஸ் இப்படியெல்லாம் பண்ணுமா “ என கமெண்ட்ஸ்களை தெறிக்கவிட்டிருக்கின்றனர்.