மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உறவு என்பது எப்போதும் தனித்துவமானது. மனிதனைக் காட்டிலும் அன்பிலும், குறும்புத்தனத்திலும் விலங்குகள் எப்போதும் அதிகளவிலே காட்டும். அந்த வரிசையில் யானையின் அன்பும், குறும்புத்தனம் அலாதியானது. உருவத்தில் மிகப்பெரிய தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் யானை, குழந்தைத்தனத்திலும், அன்பிலும் குழந்தையைப் போன்று மனிதர்களிடம் நடந்து கொள்ளும் குணம் கொண்டது.
இந்நிலையில், காட்டுப்பாதையில் சாலையை கடந்த யானை கூட்டத்தின் சீனியர் யானை ஒன்று, வாகனங்களில் காத்திருந்த மனிதர்களுக்காக நன்றி தெரிவித்த வீடியோ இப்போது வைரலாகி உள்ளது. ஒரு முறை பார்த்தால், திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் அவ்வளவு அழகு அந்த வீடியோவில். இந்திய ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
வீடியோ எடுக்கப்பட்ட இடம், இந்தியாவா அல்ல வேறு நாட்டு பகுதியா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், யானைகளைப் பார்த்தால் இந்தியாவைப் போலதான் இருக்கின்றது. அந்த வீடியோவில் கூட்டமாக சாலையைக் கடக்கும் யானைகளுக்கு வழிவிட்டு தூரத்தில் வாகனங்களோடு நிற்கின்றனர் மக்கள். சாலையைக் கடந்துவிடும் யானைகளின் கூட்டத்தின் கடைசி யானை, வாகனங்கள் நின்று கொண்டிருந்த பக்கத்தை திரும்பி பார்த்து தும்பிக்கையை தூக்கி நன்றி தெரிவிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. விலங்கு ஆர்வலர்களும், யானை விரும்பிகளும் வீடியோவை பார்த்து அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் நீலகிரியில் புலியை தேடித்திரிந்த வனத்துறையைச் சேர்ந்த ஒருவரை யானைக்குட்டி ஒன்று தனது தும்பிக்கையால் அரவணைத்துக் கொண்ட படமும் மிகவும் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை காண:
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்