மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே சோலாபூர் மாவட்டம் உள்ளது. இப்பகுதியில் ஐடி துறையில் வேலை பார்க்கும்  இரட்டை சகோகதரிகள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும், ஒரே நபரை திருமணம் செய்ய வேண்டும் என விருப்பத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.


சில தினங்களுக்கு முன்பு, இரட்டை சகோதரிகளின் தந்தை காலமாகிவிட்டார். இந்நிலையில், தாயுடன் இரண்டு மகள் வசித்து வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் 36 வயதாவதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, தாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது, அவரை அதுல் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, இரட்டை சகோதரிகளுடன் அதுலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரட்டை சகோதரிகளின் விருப்பப்படி, அதுலை திருமணம் செய்தனர். 


இவர்களின் திருமணமானது, இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றுள்ளது.


இவர்களின் திருமண வீடியோவானது, சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, ஒரே நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 






இதையடுத்து, கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது மற்றொருவரை திருமணம் செய்யக்கூடாது என கூறி, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Also Read: Assam MP: "இந்துக்களும் இளம் வயதிலே திருமணம் பண்ணிக்கனும்.." அஸ்ஸாம் எம்.பி. சரமாரி சர்ச்சை பேச்சு...!


Also Read: Crime: தங்கையை திருமணம் செய்து தர மறுத்த அண்ணனை வெட்டிக்கொன்ற இளைஞர்..! திண்டுக்கல்லில் பரபரப்பு..