இன்று டிசம்பர் 4ஆம் தேதி. இந்தாண்டு முடிவடைவதற்கு இன்னும் 27 நாள்களே உள்ளது. இது ஒரு சாதாரண தேதியாகத் தோன்றினாலும், நமது வரலாறு வேறுவிதமாகக் கூறுகிறது. நாம் சற்று ஆழமாக ஆராய்ந்தால், பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மற்றும் வரலாற்று சம்பவங்கள் இன்றைய தேதியில் நடந்திருப்பது தெரிய வரும்.


சுரிநாம் நாட்டின் அரசியல்வாதி ஹென்க் அரோனின் பிறந்த நாள் முதல் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சதி நடைமுறை ஒழிப்பு வரையில் இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்:


1829 - ஆங்கிலேய அரசால் ஒழிக்கப்பட்ட சதி


இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியின் போதுதான், சதி முறை ஒழிக்கப்பட்டது. அதில், கைம்பெண்கள் தங்கள் கணவரின் இறுதிச் சடங்கில் தங்களை உயிருடன் எரித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். வங்க சதி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த நடைமுறை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. ராஜா ராம்மோகன் ராய் போன்ற பல இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் சதியை ஒழிப்பதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.


1969 - பிரெட் ஹாம்ப்டன் கொலை


கருப்பின மக்களுக்காக இயங்கி வரும் பிளாக் பாந்தர்ஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளரும், அமெரிக்க மனித உரிமைத் தலைவருமான ஃபிரெட் ஹாம்ப்டன், 1969ஆம் ஆண்டு இதே நாளில்தான் சிகாகோவில் காவல்துறை மேற்கொண்ட திடீர் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிளாக் பாந்தர்ஸை வலுவிழக்கச் செய்வதற்காக ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் நடத்திய சோதனையில் அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, பிளாக் பாந்தர்ஸ் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பல கறுப்பின ஆர்வலர்கள், பெரும் போராட்டங்களைத் தொடங்கினர். 


1970 - ராப்பர் ஜே-இசட் பிறந்தார்


1970 இல் இதே நாளில், தொழில் ரீதியாக ஜே-இசட் என்று அழைக்கப்படும் ஷான் கோரி கார்ட்டர் பிறந்தார். 1990 மற்றும் 2000 களின் முற்பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க ஹிப்-ஹாப் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஜே-இசட் ஒரு அமெரிக்க ராப்பர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார்.


1980 - லெட் செப்பெலின் இசைக்குழு கலைக்கப்பட்டது


பிரிட்டன் ராக் இசைக்குழுவான லெட் செப்பெலின் டிரம் வாசிப்பாளரான ஜான் பான்ஹாம் இறந்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, லெட் செப்பெலின் 1980ஆம் ஆண்டு இதே நாளில் கலைக்கப்பட்டது. அதற்கு பின்னரும், சிறிய சிறிய நிகழ்ச்சிகளுக்காக இசைக்குழுவினர் ஒன்று சேர்ந்து பெர்ஃபார்ம் செய்துள்ளனர். அவர்களின் புகழ் இன்றளவும் குறையாமல் உள்ளது. வரலாற்றின் சிறந்த ராக் இசைக்குழுக்களில் ஒன்றாக அவர்கள் கருதப்படுகின்றனர்.


2000 - சூரிநாம் நாட்டின் அரசியல்வாதி ஹென்க் அரோன் காலமானார்


சூரிநாம் நாட்டின் அரசியல்வாதி ஹென்க் அரோன் 64 வயதில் காலமானார். நெதர்லாந்தில் இருந்து சுரிநாம் சுதந்திரம் பெற (1975) உதவிய அரோன், 1973 முதல் 1980 வரை அதன் பிரதமராகவும் பணியாற்றினார். ஆனால், அதற்கு பிறகு அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.