சமூக வலைதளங்களில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவை போல் சில வியக்க வைக்கும் பதிவுகளை மற்றொரு தொழிலதிபர்ஹர்ஷ் கோயன்காவும் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் வித்தியாசமான ஒரு பதிவை செய்துள்ளார். அந்தப் பதிவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்து வருகின்றனர். 


இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு பெண் தன்னுடைய உடம்பை வில்லாக வலைத்து காலின் மூலம் வில் அம்பை விடுகிறார். அதுவும் ஒரு குறிப்பிட்ட இலக்கை வைத்து அதில் லாவகமாக விடுகிறது. தலை கீழாக நிற்கும் போது அவர் தன்னுடைய இரண்டு கைகளின் மூலம் மொத்த உடல் எடையையும் தாங்குகிறார். மேலும் தன் கால்களை அவ்வளவு எளிதாக வலைத்து அந்த அம்பை விடுகிறார். இதை பார்க்கும் போது நமது கண்ணில் மிகப் பெரிய ஆச்சரியம் எழுந்து விடுகிறது. 


 






இந்த வீடியோவை பதிவு செய்துவிட்டு, “இப்படி ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் தொடக்க தீபத்தை ஏற்றினால் எப்படி இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை தற்போது வரை 1.3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் அந்த பெண்ணின் திறமையை பாராட்டி தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 






 






 






 






 






 






இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: பை நிறைய செல்போன் திருடிய ஆந்திர கும்பல்! திருட்டுபோன் என தெரிந்தும் வாங்கிய மக்கள்..