ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனின் திறமையை கண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வியப்படைந்துள்ளார்.


இதையடுத்து, அச்சிறுவனின் கனவை நிறைவேற்ற உதவும்படி ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை ராகுல் காந்தி கேட்டு கொண்டுள்ளார்.


 






ராகுல் காந்தி ரீட்வீட் செய்த அந்த வீடியோவில், 16 வயது சிறுவன் பரத் சிங் மீன்பிடி வலையைப் பயன்படுத்தி பந்துவீச்சு பயிற்சி எடுத்து கொள்வதை பார்க்கலாம்.


6 வினாடி வீடியோவை ரீட்வீட் செய்த ராகுல் காந்தி, "நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அற்புதமான திறமைகள் ஒளிந்துள்ளன. அவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பது நமது கடமை. இந்தக் குழந்தையின் கனவை நனவாக்க உதவுமாறு அசோக் கெலாட்டை கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்த கெலாட், "நிச்சயமாக, இதை மேலும் எடுத்துச் செல்வேன், தேவையானதைச் செய்வேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.


இதுபோன்ற வீடியோ வெளியாவது இது முதல்முறை. சிறுவர், சிறுமிகளின் திறமை வெளிப்படுத்தும் விதமாக பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த மாதிரியான அசாத்திய திறமைசாளிகளுக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர்.


கொரோனா காலத்தில், பல மருத்துவமனைகளில், அவசியமான மருத்துவ கருவிகள் பற்றாக்குறையில் இருந்தன. இதையடுத்து, ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதையடுத்து, காங்கிரஸ் இளைஞரணி சார்பில் ஆக்சிஜன் உள்பட தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில், ராணுவத்தில் சேர்வதற்காக இளைஞர் ஒருவர் சாலையில் ஜாகிங் மேற்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. காரில் சென்ற ஒருவர் அவருக்கு லிப்ட் கொடுக்க முன்வந்தபோதிலும் அதை இளைஞர் மறுத்திருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண