புதுச்சேரி சாரம் சத்தியா நகர் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநரான சீனிவாசனின் மகன் யுவராஜ் (29). 12ஆம் வகுப்பு படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர் முதலியார்பேட்டை ஐயப்பசாமி நகர் பகுதியில் வசிக்கும் உமாதேவி என்பவரது மகளான லிங்கேஸ்வரியை கடந்த 8 மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இருவரது குடும்பத்தினரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகின்றது.


Surya's 2D Entertainment: ரம்யா பாண்டியனிடம் சூர்யா சொன்னது!




இந்நிலையில் லிங்கேஸ்வரி பொறியியல் படித்து விட்டு வேலை தேடி வந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு சென்னையில் வேலை கிடைத்துள்ளது. கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னை  சென்று யுவராஜ்  லிங்கேஸ்வரியின் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் யுவராஜ் விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த நிலையில் அவருக்கும் லிங்கேஸ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் லிங்கேஸ்வரி யுவராஜிடம் பேசுவதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகின்றது. கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலையில் இருந்த யுவராஜ்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Bigg Boss 5 Tamil: பிக்பாஸ்ல கலந்துக்குற ஐடியா இல்ல -விஜே பிரியங்கா




இதனை அடுத்து அவரது நண்பர்கள் “பெண்ணை திருமணம் செய்து தருவதாக கூறி பணம், பொருள் ஏமாற்றி வாலிபரை தூக்கில் தொங்கவிட்ட குடும்ப குத்து விளக்குகள்” என லிங்கேஸ்வரி மற்றும் அவரது தாயார் படுத்துடன் போஸ்டர் அடுத்த சத்தியா நகர் பகுதியில் ஒட்டப்பட்டது.இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து. மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் இந்த பேனர் தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது.


 


இது குறித்து யுவராஜ் பெற்றோர்கள் கூறும்போது இருவரும் நன்றாகத்தான் பழகி வந்தனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. திடீரென இரண்டு பேரும் பேசாததால் எனது மகன் மன உளைச்சலில் இருந்தான். நாங்கள் பேசி தீர்த்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தோம். அதற்குள் தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து புகார் அளித்துள்ளோம். விசாரணையில் அந்த பெண் மீது குற்றம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வாலிபரிடம் நன்றாக பேசி பழகிவிட்டு திடீரென பெண் விலகியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Aazhi Senthilnathan Interview: மேடைல கத்தறதா தமிழ்த்தேசியம்? அண்ணாகிட்ட கேளுங்க!