Uttar Pradesh : உத்தர பிரதேசத்தில் கான்ஸ்டபிள் ஒருவரின் விடுப்பு விண்ணப்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் பல்வேறு காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதில் சிலர் தெரிவிக்கும் காரணங்கள் இணையத்தளங்களில் வைரலாகும். அதன்படி, உத்தர பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நௌதன்வா காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. அவர் மௌ மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனக்கு விடுப்பு வேண்டும் என ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதை அடுத்து, அவர் எழுதிய விடுப்பு விண்ணப்பத்தில் தனக்கு விடுமுறை கிடைக்காததால் மனைவி கோபமடைந்துள்ளார். அதனால் ஃபோன் செய்யும்போது தன்னுடன் பேசுவதில்லை என்றும் பலமுறை ஃபோன் செய்தததாகவும் அதை அவர் எடுக்கமால், தனது தாயிடம் ஃபோனை கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று தனது மனைவிக்கு உறுதியளித்ததாகவும் விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டு விடுப்பு கேட்டுள்ளார்.


இந்த விண்ணப்பத்தை படித்த உதவி கண்காணிப்பாளர், ஜனவரி 10 முதல் 5 நாட்களுக்கு  விடுப்பு வழங்கியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ”கடமையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு  அவர்களின் தேவைக்கேற்கு விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விடுப்பு தொடர்பாக எவ்வித இடையூறும் எந்த போலீசாருககு ஏற்படக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.


முன்னதாக,


சில நாட்களுக்கு முன்பு, அரசு ஊழியர் ஒருவர் எழுதிய விடுப்பு கடிதம் வைரலானது. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் அரசு ஊழியர் ஒருவர் தனது அதிகாரிக்கு விடுப்பு விண்ணப்பம் அளித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தனது 3 குழந்தைகளுடன் மனைவி, அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் எனக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது தாயார் வீட்டில் இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துவரை விடுப்பு தேவைப்படுகிறது. இதனால் எனக்கு ஆறு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.




மேலும் படிக்க


Earthquake : இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் 7.7 ஆக பதிவானது.. என்ன நடந்தது?


HighCourt Marriage : திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டு பாலியல் உறவு கொண்டால்...!! உயர்நீதிமன்றம் தெரிவித்தது என்ன?